நாகர்கோவில் அக்- 07,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குஜராத் மாநிலம் காந்தி தாமிலிருந்து நாகர்கோயில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 11.30 மணி அளவில் நடைமேடை ஒன்றில் வந்து சேர்ந்தது. இந்த ரயிலில் பேண்டிரி காரில் பணிபுரியும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த வனம் சிங் யாதவ் (48) என்பவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது கைப்பையில் மறைத்து வைத்து குஜராத்திலிருந்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்க்காக கொண்டு வரப்பட்ட 26 லிட்டர் மதுபானம் 35 மதுபாட்டில்கள் பாட்டில்களில் கொண்டு வருவதாக நாகர்கோவில் இருப்பு பாதை ரயில்வே போலீசாருக்கு கிடைத்த ரகசிய தவலின் படி வனம் சிங் யாதவின் கைபையினை ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபால், நாகர்கோவில் மதுவிலக்கு ஆய்வாளர் பிரவினா, துணை ஆய்வாளர்கள் பாண்டியம்மாள், குருநாதன், திருவனந்தபுரம் ரயில்வே காவல் நிலைய உளவுத்துறை சிறப்பு காவல் துணை ஆய்வாளர் ஜோஸ் தலைமையிலான போலீசார் சோதனை செய்ததில் வனம் சிங் யாதவ் இடம் இருந்து 35 மது பாட்டில்கள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.