நாகர்கோவில் அக் 07
குமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் வைத்து கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு துணை அமைப்பாளரும் அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவருமான முத்துக்குமார் தெரிவிக்கையில் :- கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அந்த தீர்மானங்கள் என்னவென்றால் :-
ஐ ஆர் இ எல் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்,
கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,
குமரி மாவட்டத்தில் இயற்கை வளங்களை கொள்ளையிடும் கனிமவள திருட்டான கடல் மணல், ஆற்றுமணல், மலைகள் தகர்ப்பு போன்ற நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்,
ஏற்கனவே ஐ ஆர் இ எல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உருவாக்கக்கூடிய ஆலைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்பை ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்து கண்டறிந்து, சம்பந்தப்பட்ட ஆலைகளின் பொறுப்பில் நிவாரணம் வழங்க வேண்டும்,
அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்,
அரசின் கவனத்தை ஈர்க்க மாநில தலைநகர் சென்னையிலும், தேசத்தின் தலைநகர் டெல்லியிலும் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் இயக்கங்களை இணைத்து போராட்டம் மேற்கொள்வது,
இந்த போராட்டங்களை தமிழகம் தழுவிய போராட்டமாக விரிவுப்படுத்த முயற்சி மேற்கொள்வது,
1989- ல் கூடங்குளம் அணு உலைக்கு, பேச்சிப்பாறை நீரை கொண்டு செல்ல விடாமல், அனைத்து மக்களும் இணைந்து போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தி, விவசாயிகளின் நலன் காத்தது போல் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து குமரி மாவட்ட மக்களை காக்கும் வாழ்வுரிமை போராட்டமாக எடுத்து செல்வது,
வீதிமுனை பிரச்சாரங்கள் நடத்துவது மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். நடைபெற்ற அமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்கு அமைப்பாளர் அண்டன் கோம்ஸ் தலைமை தாங்கினார்.
துணை அமைப்பாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவருமான முத்துக்குமார், துணை அமைப்பாளர் நாஞ்சில் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளான தேவதாஸ், தாமஸ் பெர்னான்டோ, ராகவ ராஜ், ரவி, மேரி, தாமஸ், சக்தி, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.