கன்னியாகுமரி அக் 5
அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி பூஜை 3 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி வரும் 12 ஆம் தேதி சனிக்கிழமை வரை 10 நாட்கள் நடை பெறுகிறது.
நவராத்திரி பூஜையின் முதல் நாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. மேலும் ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி, தெய்வயானை, ஸ்ரீ ராமர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் மற்றும் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து
ஆலய அறங்காவல் குழு தலைவர் வாரியூர் நடராஜன் தலைமையில், செயலாளர் காணி மடம் தங்கபாண்டியன் ஆசிரியர் பொருளாளர் மேட்டுக்குடி முருகன் ஆகியோர் முன்னிலையில் ஆலய குருக்கள் கணேசப்பட்டர் அலங்கரிக்கப் பட்ட தெய்வ உருவங்கள் அடங்கிய கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு அலங்கார பூஜை நடத்தினார்.
இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் தசரா திருவிழாவிற்காக குலசேகரபட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் ஆலயத்திற்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர் அவர்களுக்கு ஆலய குருக்கள் கணேச பட்டர் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் வீடியோகுமார், பரஞ்ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.