நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு செல்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குத்தாலம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி சார்பில் குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குத்தாலம் ஒன்றிய தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் குட்டிகோபி கலந்து கொண்டு
பேசுகையில்; மாநாட்டிற்கு குத்தாலம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் இருந்து சுமார் 2000 நபர்களை அழைத்து வர வேண்டும், இருசக்கர வாகனத்தில் யாரும் வரக்கூடாது மற்றும் மது அருந்திவிட்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். இதில் பேரூராட்சி தலைவர் ஆபேல், பேரூராட்சி நிர்வாகி லோகு.சிவா, மாவட்டஇணைச் செயலாளர் ஆதாம் அறிவரசன், மாவட்ட நிர்வாகி ஜான் மில்டன், ஒன்றிய மகளிர் அணி தாமரைச்செல்வி, இளைஞரணி துணை செயலாளர் சி.பாரி, மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய தலைவர் மனோகர், செம்பை ஒன்றிய துணைத் தலைவர் நடராஜன், இளைஞரணி நிர்வாகி அரவிந்த், குத்தாலம் ஒன்றிய நிர்வாகிகள் சூர்யா, சதீஷ், நவீன், சாய் சூர்யா, ராஜ்கீரன்,பாலா லோகநாதன், கணேஷ், பிரகதீஷ்வரன், வினோஷ், ரஞ்சித், ரோகித், மாதவன், கருணாநிதி, கார்த்தி, சக்திவேள், முருகன் ரமேஷ், விஷ்வா ராகுல், பிரகாஷ், கார்த்தி, மார்டீன் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.