நாகர்கோவில் அக் 4
குமரி மாவட்டம் தோவாளை பண்டாரபுரத்தில் கைலாசபுரம் பத்திரகாளி அம்மன் தசரா குழுவின் சார்பில் 4-ம் ஆண்டு காளி பூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்கள் மத்தியில் அவர் பேசுகையில்,
சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் 4-வது ஆண்டாக காளி பூஜை விழா நடைபெறுகிறது. இக்கிராமம் தூய்மையாக தொடர்ந்து இருக்க வேண்டும். இளைஞர் சமுதாயம் முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும். அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சமத்துவ விருந்து இங்கு வழங்கப்படுகிறது. ஒழுக்கம், நெறிமுறைகளை பின்பற்றி தெய்வீக சிந்தனையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கையில் நல்ல பாதைகளில் நாம் பயணிப்போமேயானால் நல்லவைகளே நடக்கும். நன்மைகள் தொடரும். தவறான பாதைகளில் நாம் சென்றால் துன்பங்களை தான் நாம் சந்திக்க நேரிடும். தவறான பாதைகளில் நடந்து குற்ற செயல்களில் ஈடுபட்டால், காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு நாம் ஆளாகி வழக்குகளை சந்திக்க நேரிடும். இதன் வாயிலாக பல்வேறு துன்பங்களை தான் நாம் காண முடியும். இதனை உணர்ந்து இளைய சமுதாயம் கல்வியில் கவனம் செலுத்தி, சமுதாய சேவை மனப்பான்மையோடு செயல்பட வேண்டும் என அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.தளவாய்சுந்தரம் மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன், முன்னாள் ஊர் தலைவர் ராமன், வார்டு உறுப்பினர் இசக்கிமுத்து, கிளை கழகச் செயலாளர்கள் அய்யப்பன், ராமகிருஷ்ணன் நிர்வாகிகள் ராஜன், சுயம்பு, பக்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.