கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல் குமாரம்பட்டி பகுதியை சார்ந்த வினோத் என்பவரின் மகள் சுப்ரியா குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை அவரது விவசாய நிலத்தில் தக்காளி தோட்டத்திற்கு தண்ணீர் கட்டி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதனை அறியாத அவரது பெற்றோரான வினோத் மற்றும் ரேவதி தம்பதியினர் சிறுமியை காணவில்லை என்று நேற்று இரவு முழுவதும் அக்கம் பக்கம் உறவினர்களிடம் பள்ளி தோழிகளிடமும் விசாரித்து வந்துள்ளனர்.
அப்போது நேற்று மாலை தக்காளி தோட்டத்திற்கு தண்ணீர் கட்ட சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரை ஊத்தங்கரை தீயணைப்பு துறை உதவியுடன் வடித்து பார்த்தபோது சிறுமி சடலமாக கிடந்தார்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த மாணவியன் உடல் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.