நாகர்கோயில் – அக்- 03,
மகாத்மா காந்தியின் 156 ஆவது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா ஆகியவை நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலையம் அருகே காமராஜர் கட்டிடத்தில் உள்ள கதர் அங்காடியில் நேற்று நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் அழகுமீனா தலைமை தாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார் நிகழ்ச்சிக்கு மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 3 கிராமிய நூற்ப்பு நிலையங்களும் ஒரு கதர் உப கிளை மற்றும் 3 கிராமிய நூற்பு நிலையங்களும் ஒரு கதர் உப கிளை மற்றும் 3 கதர் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன கதர் அங்காடிகள் மூலமாக கடந்த ஆண்டு கதர்ரகங்கள் ரூ 2 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது அதில் ரூ . 1.6 கோடிக்கு விற்பனை நடந்தது.இதே போல கிராம பொருள்கள் ரூ 2.61கோடிக்கு விற்பனை நடந்தது. மேலும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவி தொகையாக 327 பயணிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக ரூ.5 ஆயிரம் வீதம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை முன்னிட்டு தரம் மிக்க அசல் வெள்ளி ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள் , கதர் வேட்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை தலையணைகள், கண் கவரும் கதர் பட்டு ரகங்கள், பாலிஸ்டர், மற்றும் உல்லன் ஆகிய ரகங்களும் சுத்தமான அக்மார்க் தேன் , குளியல் சோப்பு , சாம்பிராணி, பூஜை பொருள்கள், பனைவெல்லம், மற்றும் பனை பொருள்கள், விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதற்காக மத்திய மாநில அரசுகளின் உதவி பெற்று கதர் பாலிவஸ்தரா மற்றும் பட்டு ரகங்களுக்கு 30% , உல்லன் ரகங்களுக்கு 20% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பாத ஊதியத்தில் 10% தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குமரி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ 3.90 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கூறினார் விழாவில் உதவி இயக்குனர் எபினேசர் உட்பட பலர் கலந்து கொண்டர்.