சங்கரன் கோவில்: மே:2
தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்திரவின் படி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜிபி ராஜா ஆலோசனைப்படி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் மக்களை தேடி வாகனம் மூலம் நீர், மோர், இளநீர், பழங்கள், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் வாகனத்தை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா ஈஸ்வரன் துவக்கி வைத்தார்கள். தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட பொருளாளர் சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜ்,ராயல் கார்த்தி, ராஜராஜன், மணிகண்டன், அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வாகனம் மூலம் மக்களை தேடி சென்று நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

Leave a comment