ஆரல்வாய்மொழி அக் 3
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்மன் தசராகுழு நடத்தும் 8-ம் ஆண்டு தசரா திருவிழாவில் ஸ்ரீ குலசை முத்தாரம்மன் படம் வைத்து அலங்கார தீபாரதனை நடைபெற்றது .
இதில் சிறப்பு விருந்தினராக தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும்,ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார் .ஆரல்வாய்மொழி பேரூர் கழகச் செயலாளர் , 12-வது வார்டு கவுன்சிலர் சுடலையாண்டி கலந்து கொண்டார்.