தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி ஊராட்சி காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது கிராம சபை கூட்டம் ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி மற்றும் துணைத் தலைவர் ரேகா தலைமையில் நடைபெற்றது கிராமசபை கூட்டத்தில் பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்பது முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது
கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் சங்கர சுப்பிரமணியன்,வார்டு உறுப்பினர்கள் பட்ட முத்து, முத்துலட்சுமி, இசக்கிபாண்டி, முருக செல்வி, முகமது இப்ராகிம், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.