மதுரை அக்டோபர் 2,
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடி
உலக புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் முன்னிலையில் இத்திருக்கோயில் மற்றும் 11 உப கோயில்களின் நிரந்தர உண்டியல்கள், 5 திருக்கோயில்களின் அன்னதான உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின் போது திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அவரது பிரதிநிதி, திருக்கோயில் அறங்காவலர்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை (தெற்கு) மற்றும் மதுரை (வடக்கு) சரக ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ.1,13,84,165/- (ரூபாய் ஒரு கோடியே பதிமூன்று இலட்சத்து எண்பத்து நான்காயிரத்து நூற்று அறுபத்து ஐந்து மட்டும்), பலமாற்று பொன் இனங்கள் 455 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 649 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 398 எண்ணம் கிடைக்கப் பெற்றன என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.