நாகர்கோவில் – அக்- 02 ,
இரணியல் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக லெட்சுமிபுரத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
இம் முகாமில் கல்லூரியின் முதல்வர் முனைவர் . சங்கரி வரவேற்புரையாற்றினார் . இரணியல் வட்ட சட்டப் பணிகள் குழுவின் வழக்கறிஞர் மேரி ஜெயா , பாலியல் வன்கொடுமை பற்றியும் வழக்கறிஞர் பிரபு இளம் சிறார்களுக்கான சட்டங்கள் பற்றியும் சிறப்புரையாற்றினார்கள். இந் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி முனைவர்கள் சரவணன், சுதன், பிரசாந்த், மஞ்சுஷா, ஜெயந்தி, சரவணவேல் மற்றும் இரணியல் வட்டச் சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வலர் மணிகண்டன் கலந்து கொண்டனர். இறுதியில் முனைவர் மெஜிலா ஜீவி நன்றியுரை நிகழ்த்தினார்.