கன்னியாகுமரி அக் 1
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம் பொற்றையடியில் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் செல்வன் தலைமை வகித்தார்.ஒன்றிய பொது செயலாளர் எம்.ஆர்.சிவா வரவேற்றார்.
ஒன்றிய பொருளாளர் பொன்னையா முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் எஸ்.பி.அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் வருகிற 3 ந்தேதி இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடாரின் 36-வது நினைவு தினத்தை பொற்றையடியில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலரஞ்சலியும் வீரவணக்க சபதமேற்பு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திடவும், நிகழ்ச்சியில் பங்கேற்ற வருகை தரும் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசு ராஜா, மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் மாவட்ட ,ஒன்றிய, அனைத்து இந்து சமுதாய தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் சுபாஷ் நன்றி கூறினார்.