வேலூர் அக் 1
வேலூர் மாவட்டம் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற வேலூர் சங்கமும் நம்ம ஊரு திருவிழா நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, அவர்கள் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு கலை மன்ற விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு. பாபு, மண்டலக்குழுத் தலைவர் நரேந்திரன், மாமன்ற உறுப்பினர் கா. சு. சண்முகம், கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் பா. ஹேமாநாதன், உதவி இயக்குநர் சி. நீலமேகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.