ஈரோடு அக் 1
ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மீலாதுன் நபி சமூக நல்லிணக்க விழா ஈரோடு எம் ஐ எஸ் அரங்கத்தில் நடந்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அஸ்கர் அலி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முகமது ஆரிப் வரவேற்றார். இமாம் அப்துல் அகத் தாவூதி இறை வசனம் வாசித்தார் .
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
பாராளுமன்றத்திலும் ராஜ்ய சபையிலும் தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஐந்து எம்பிக்கள் உள்ளனர் இதை 25 எம்பிக்களாக மாற்ற வியூகம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடத்தி வரும் திராவிடமாடல் ஆட்சி நல்லாட்சி. மற்ற மாநிலங்களுக்கு இந்த ஆட்சி எடுத்துக்காட்டாக விளங்குகிறது . மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கை இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது உதயநிதி ஸ்டாலினை துணை முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்கிறது .
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கோவை அன்னூர் ஓதிமலை சிவனேச அடிகளார் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கம் பற்றி பேசினார். முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட பொருளாளர் முகமது கலீல் நன்றி கூறினார்.