நாகர்கோவில் – செப் – 29,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் பேரமைப்பின் மாவட்ட தலைவர் கே. பாபு தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் அதிக அளவு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் வருகை தந்த அனைவரையும் வரவேற்று கௌரவ தலைவர் பால்ராஜ் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட செயலாலர் பிரேம்சிங் அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ஆதிசிவன் அவர்களால் வரவு செலவு கணக்கு அனைவரின் ஒப்புதலோடு சமர்ப்பிக்க பட்டது.
வணிகர்களுக்கான பேரமைப்பு முரசு பத்திரிகையின் சிறப்பு அம்சங்களை மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.ரமேஷ் தெளிவாக எடுத்து கூறினார்.
மாநில துனை தலைவர்கள் ஜோசப்ராஜ் மற்றும் துரைராஜ் மாவட்ட பேரமைப்பின் வளர்ச்சியை பற்றி தெளிவாக எடுத்து கூறினார்கள்.
மறைந்த ஐயா த.வெள்ளையன் அவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த பட்டது.
பேரமைப்பின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே.பாபு தலைவர் உறையாற்றி முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது
அரசால் தடை செய்யப்பட்ட எந்தவிதமான போதை பொருட்களையும் வணிகர்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடசேரி பேருந்து நிலையம் விரிவாக்கம் என்ற பெயரில் வடசேரி பாரம்பரிய கனகமூள சந்தையை அப்புறப்படுத்த நினைக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு மேல் வடசேரி கனகமூலம் சந்தையை நம்பி தொழில் நடத்தி வரும் கடை உரிமையாளர்கள் மற்றும் அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாழிகளின் வாழ்வாதார நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் மாவட்ட சட்ட ஆலோசகர் மனோகர் நன்றி தெரிவித்தார்கள்.