கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்திட வேண்டும். திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ அறிக்கை.
சங்கரன்கோவில். மே.1
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில்
தமிழ்நாட்டில் கடுமையான வெயிலின் தாக்கம் இருப்பதாலும்,இன்னும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக வாய்ப்புள்ளதால் இந்த வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து விடும் வகையில் திமுக தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உத்தரவின் படியும், வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆலோசனையின் படியும், தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நீர், மோர் பந்தல் அமைத்து பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும் எனவும்,மாவட்டத்தில் உள்ள நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும் எனவும், இது தொடர்பான பணிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத் தோழர்கள் அனைவரும் இணைந்து செயல்படுத்திட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.