நாகர்கோவில் செப்.29
ஐஆர்இ ஆலைக்கு தாது மணல் அள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
அகில இந்திய பணியாளர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் பா. ஆல்பின் மனோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஐஆர் இ மணல் ஆலையிலிருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 1144 ஹெக்டேர் நிலங்கள் குத்தகை எடுப்பதற்காக மிடாலம் மேல்மிடாலம்,இனையம், இனையம் புத்தன்துறை, தூத்தூர் இரையுமன்துறை, வள்ளவிளை, நீரோடி மற்றும் கொல்லங்கோடு போன்ற கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான கருத்து கேட்பு கூட்டம் வரும் அக்டோபர் 1_ம் தேதி பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறயிருக்கிறது. இந்த அறிவிப்பு மீனவ கிராமங்கள் மற்றும் குமரி மாவட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த அணு கனிம சுரங்க திட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட உத்தரவிடவேண்டும்.
மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளையும்,பாறைகளையும் உடைத்து குறுகிய சாலைகளில் டாரஸ் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்வதால் பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதன் விளைவாக டாரஸ் லாரிகளினால் விபத்து எற்பட்டு இதுவரை 39 க்கு மேற்பட்டோர் உயிர்யிழந்துள்ளார் ஆகையால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல் குவாரிகளையும் மத்திய மாநில அரசுகள் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.