மன்னம்பந்தல் ஊராட்சியில் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், தூய்மை பணியாளர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி.
தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் தூய்மையே சேவை இயக்கம் 2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சியில் இன்று நடைபெற்றது. இப்பேரணியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, சுதாகர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக தூய்மையின் அவசியத்தை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி ஏ.வி.சி தனியார் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேரணியாக சென்றனர். தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும், குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பைகளை பெற்று சென்றனர்.