நாகர்கோவில் செப் 28
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய அஞ்சல் துறையால் செப்டம்பர் 17 முதல் 2 அக்டோபர் வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற தூய்மையே சேவை 2024ன் ஒரு பகுதியாக நேற்று 27-ம் தேதி நாகர்கோவில் இந்து கல்வியியல் கல்லூரியில் வருங்கால ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் தூய்மை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியை கன்னியாகுமரி தபால் துறை கோட்டத்தின் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி சிவக்குமார் மற்றும் வணிக வளர்ச்சி அதிகாரி ராம்குமார் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் குமரி ஆஷா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 20க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.