ராமநாதபுரம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 62-வது குருபூஜை, 117வது ஜெயந்தி விழா 2அக். 28-30ம் தேதி வரை நடக்க உள்ளதால் முன் னேற்பாடு பணிகளை அக்.20க்குள் முடிக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட் டுள்ளார்.
விழாவில் முதல்வர், அமைச்சர்கள், அனைத்துகட்சி, சமு தாய தலைவர்கள், நிர் வாகிகள், பொதுமக்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். இதற்கான முன் னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். பின் அனைத் துத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் குருபூஜை விழா முன்னேற்பாடு பணி கள் வேகமாக நடக்கிறது. விழாவிற்கு முக்கிய பிரமு கர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடங்கள், குடிநீர், கழிப்பறை, மின் விளக்கு, மருத்துவம், ரோடு சீரமைப்பு உட்பட அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டைப்போலவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வுள்ளது. கூடுதல் மின் விளக் குகள், சி.சி.டி.வி., கேமரா அமைக்கப்படும். அக்.20க்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.உடன்
பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர், ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்செல்விபோஸ் பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் மற்றும் மாவட்ட கவுன்சி லர் வாசுதேவன் உட்பட அனைத்து துறை அதிகாரி கள் கலந்து கொண்டனர்
பசும்பொன்னில் அக்.20க்குள் அனைத்து பணிகளை முடிக்க கலெக்டர் உத்தரவு

Leave a comment