நாகர்கோவில் – செப்- 27,
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் இரணியல் கிராமம் புல எண் 409/1-ல் 3.16.0 ஏர் வலிய குளம் இரணியல் கோணத்தில் உள்ளது.மேற்படி குளம் புல் பூண்டு நிறைந்து ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளது.கழிந்த 2014,2017,2018 ஆகிய மூன்று ஆண்டுகள் கல்குளம் வட்ட நில அளவையர்கள் எல்லை அளவு செய்து எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கல்குளம் வட்டாச்சியர் இதுவரை படிவம் 1, வழங்கவில்லை.எனவே தாங்கள் அறிவுறுத்துமாறு வேண்டுகிறோம்.வலிய குளத்தில் 100க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளது.அனைத்தும் இதுவரை பொதுப்பணித்துறை நீர் ஆதாரம் படிவம் 1 கிடைக்காததால் ஏலம் விடப்படவில்லை,தனியார் அனுபவித்து வருகிறார்கள்.
மேற்படி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு இதுவரை அகற்றப்படவில்லை சுமார் 15 வருடங்களாக விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் எட்டப்படவில்லை.
எனவே இவ்வட்டார விவசாயிகளின் நலன் கருதி இக்குளத்தில் உள்ள இரண்டு மடைகளையும் சரிசெய்து பூண்டுகளை அகற்றி விவசாயிகளின் நீர் ஆதாரத்தை பாதுகாத்து தருமாறும் அனுகவும் இந்த நீர் நிலையை காப்பாறு குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் விவசாயம் செழிக்கவும் இந்த நீர் நிலையை காப்பாற்றி தருமாறும், அது போன்று ஆரத்தி விளை கிராமம் மற்றும் இரணியல் கிராம எல்கைகளில் ஓடுவது பாளாறு . இது இரணியல் பிரிவு கால்வாயில் ஆலன்கோட்டில் பாள் ஷட்டரிலிருந்து ஆரம்பித்து, பரம்பை, கக்கோடு, கண்ணாட்டு விளை , ஆழ்வார்க் கோயில் , சடையமங்கலத்தில் வள்ளி ஆற்றில் முடிவடைகிறது. இதன் பெயர் பாளாறு . இந்த ஆறு வலிய ஏலாவில் 12/23 -ல் பெய்த பெரும் மழையில் உடைத்து பாய்த்து கொண்டிருந்தது. இதனால் வலிய ஏலா இரண்டு வருடங்களாக பயிர் செய்யாமல் தரிசாக உள்ளது . பல முறை பொதுபணித்துறை (நீர் ஆதாரம்) தக்கலையில் தொடர்பு கொண்டதால் அவர்கள் சாக்கு மூட்டைகளை அடுக்கி வைத்தார்கள் . மேலும் அதை நிரந்தரமாக கட்டுவதற்க்கு ரூ.25 லட்சம் மதிப்பீடு ஆகும் . என தெரிவித்தார்கள். எனவே இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி மேற்ப்படி உடைப்பை கட்டுவதற்க்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு தருமாறும் மேலும் இந்த பாளாறை எல்லை நிர்ணயம் செய்து ஆக்கிரமிப்பை அகற்றி புல் பூண்டுகள் அகற்றி தருமாறு கேட்டு அப்பகுதி விவசாயிகள் சார்பாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.