கிருஷ்ணகிரி,செப்.26-
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் முதுகலை ஆசிரியை திருமதி. மஞ்சுளாவிற்கு மாணவர் மேம்பாடு கல்வி வளர்ச்சி சமுதாய நலன் ஆகியவற்றில் சிறப்பான சேவையை பாராட்டி தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தால் ஆசிரியர் செம்மல் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நடைபெற்றது. இவ்விருதினை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வேல்ராஜ் வழங்கினார். சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கலைமாமணி முரளி முன்னிலை வைத்தார். தமிழக கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன செயல் இயக்குனர் டாக்டர்.முருகையன் பக்கிரிசாமி, முனைவர் வஜ்ரவேல், முனைவர் பெரியண்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விருது பெற்ற ஆசிரியையை கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்கள்.