சங்கரன்கோவில்: செப்:26
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைமை ஏற்று மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசுகையில் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் திமுக இளைஞரணி செயல்பட வேண்டும் இன்று திமுக தலைவராகவும் தமிழக முதல்வராகவும் திமுகவில் தனது தீவிர பணியால் உயர்ந்த இடத்தில் நமது முதல்வர் மு க ஸ்டாலின் இருக்கிறார் திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டுக்கோப்புடன் திமுக இளைஞரணி யினரை வழி நடத்தி வருகிறார் திமுக கொள்கை பிடிப்பு மிக்க இயக்கம் இன்று இளைஞர் அணி பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது ஆகவே இளைஞர் அணியினர் புதிய இளைஞர்களை திமுகவில் சேர்த்து கட்சியின் வரலாறு கொள்கைகள் கோட்பாடுகள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் இந்தியாவிலேயே 75 ஆண்டுகள் கடந்து பவள விழா கண்டு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் மாபெரும் இயக்கம்தான் திமுக வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கி அனைவரது வீடுகளில் திமுக கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் வர இருக்கின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தது போல் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அனைத்து பிரிவுதிமுக பொறுப்பாளர்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என திமுக இளைஞரணி யினருக்கும் சார்பு அணி நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் திமுக செயல் பாடுகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் எழுச்சி உரையாற்றினார் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜா எம்எல்ஏ கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜி பி ராஜா கலந்துகொண்டு இளைஞர் அணியினர் செயல்படக்கூடிய விதங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார் கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் மாவட்ட பொருளாளர் சங்கை இல சரவணன் ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன் ராமச்சந்திரன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் துணை அமைப்பாளர்கள் ஆர் சரவணன் ராயல் கார்த்தி மணிகண்டன் ராஜ் ராஜராஜன் ஆகியோர் திமுக இளைஞரணி சார்பு அணி அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கூட்டத்தை சிறப்பாக நடத்தினார்கள் முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செய்யது இப்ராகிம் என்ற அன்சாரி நன்றி கூறினார்.