சென்னை,
சின்ன போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட 9 அரசு பள்ளிகளில் பயிலும் 1.480 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் என்ற வரிசயில் நிதி மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மதுரவாயல் எம்.எல்.ஏ க.கணபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். உடன் சங்கர் கணேஷ் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.