நாகர்கோவில் செப்- 25,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டிடத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பணியாளர்கள் நேற்று அலுவலக வாசலின் முன்பு அமர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள் பின்வருமாறு கூறப்பட்டன: –
வருடாந்திர ஊதிய உயர்வு வேண்டும் அனைத்து துறை அலுவலக வேலைகளையும் சுமத்துவதை தவிர்க்க வேண்டும் பணி பாதுகாப்பு வேண்டும் பணியின் போது இறந்தவர்களுக்கு துறை சார்பாக இழப்பீடு வழங்க வேண்டும், வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே என நிர்ணயிக்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், வட்டார பொறுப்பு மேலாளர் மற்றும் கூடுதல் பொறுப்பு அளிக்கும் போது ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் , விடுமுறை தினங்களில் அலுவலக பணியினை செய்ய கட்டாயப்படுத்த கூடாது, கடந்த 12 ஆண்டுகளாக டிஎன் எஸ் ஆர் எல் எம் பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம் நிரந்தர பணி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.