களியக்காவிளை, செப்- 25
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள எருத்தாவூர் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை போலீஸ் போலீசார் நேற்று சோதனை செய்தனர்.
அப்போது வீட்டின் உள்ளிருந்த இரண்டு பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, பிடிபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜெபராஜ் மற்றும் விசுவம்பரன் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த வீட்டை சோதனை செய்த போது ஒரு லிட்டர் எரிசாராயம் மற்றும் 10 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்ய வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் சாராய ஊறலை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.