குளச்சல் செப் 25
குமரி மாவட்டம்
குளச்சல் மேற்கு கடற்கரை சாலையில் நாகர்கோவிலில் இருந்து குளச்சல் நோக்கி வந்த டாரஸ் லாரி எதிரே வந்த பைக்கின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வந்த குளச்சல் அருகே உள்ள பனவிளை பகுதியை சார்ந்த அஸ்பத் 19 என்ற இளைஞர் சம்பவ இடத்தில் பலியானார்.
குளச்சல் நகரத்தை சார்ந்த சிராஜ் 19 என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குளச்சல் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் குறுகிய சாலைகள் ஆகும். இந்த குறுகிய சாலைகளில் டாரஸ் லாரிகள் அதிவேகமாகவும் .
அதிக எடையுடன் விதிமுறைகளை மீறியும் செல்கின்றன.
கனரக டாரஸ் லாரிகள் இனியும் இந்த பகுதியில் அனுமதி கூடாது.
என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் குளச்சல் நகரம் சார்பாக மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு குளச்சல் நகர த.மு.மு.க. செயலாளர் ரிபாய் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.