ராமநாதபுரம், செப்.25-
ராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாள் சேவை வாரத்தை முன்னிட்டு பாஜக இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன் துவக்கி வைத்தார்.
நகராட்சி கவுன்சிலர் குமார், இளைஞரணி மாவட்ட தலைவர் மோடி முனீஸ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் அளித்தனர். மாநில செயலாளர்கள் நம்பு ராஜன் ( மீனவரணி), பிரவீன் குமார் (விவசாய அணி), வழக்கறிஞர் சண்முகநாதன் ( கலை, இலக்கிய அணி), மாவட்ட பொதுச்செயலாளர் ஆத்ம கார்த்தி, மாவட்ட துணைத்தலைவர் சங்கீதா உள்பட பலர் பங்கேற்றனர்.