மதுரை
தெப்பக்குளம் அருகில் உள்ள காமராஜர் கலையரங்கில் அரசு பேருந்து ஓட்டுநர், மற்றும் நடத்துனர்களுக்கான சாலைப் பாதுகாப்பு,
மற்றும் விபத்தில்லாமல் வாகனத்தினை இயக்குதல் தொடர்பான போக்குவரத்து விழிப்புணர்வு
நிகழ்ச்சி
மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர்.
S.வனிதா. தலைமையில்
போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் செல்வின் , மற்றும் இளமாறன் ஆகியோரின் முன்னிலையில்
நடைபெற்றது.
விழாவினை தொடர்ந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சாலை போக்குவரத்து விதிகளை எவ்வாறு கடைபிடிப்பது என்றும் நடத்துனர்கள் பயணிகள் நிறுத்தம் இடத்தில் எவ்வாறு மேற்கொள்வது போன்ற வழிமுறைகளை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு எடுத்துரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து போக்குவரத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் இதற்கான உறுதி மொழியை கனிவுடன் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது மாநகரப்
போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் நந்தகுமார் தங்கமணி ரமேஷ் குமார் கார்த்திக் தங்கப்பாண்டி சுரேஷ் ,
கணேஷ் ராம் , பஞ்சவர்ணம் ஷோபனா, பூரண கிருஷ்ணன். உட்பட போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் காவலர்கள்
மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.
முன்னதாக விழாவிற்கு வருகை புரிந்த
மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையருக்கு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலம் சார்பாக
சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.