கிருஷ்ணகிரி,செப்.19 – கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்த நாளையொட்டி பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவர் சிவபிரகாசம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவரும் கவுன்சிலருமான சங்கர், கிருஷ்ணகிரி சட்டமன்ற பொறுப்பாளர் கிருஷ்ணன், உள்பட ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ரத்த தானம் முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் திலீப் குமார் செய்திருந்தார்.