அரியலூர்,செப்:19
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் தளவாய் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிலப்பனூர், தெத்தேரி போன்ற இடங்களில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்ட எல்லையில் மணல் அதிகமாக இருப்பதால் அந்த பகுதியில் இருந்து மணலைதிருடி மாட்டு வண்டி மூலமாக கடத்திச் சென்று முந்திரி காட்டில் பதுக்கிவைத்து முதுகுளம், வழியாக ஆண்டிமடம் பகுதிக்கு டிப்பர் லாரி, டாட்டா ஏசி மூலமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலீசார் மடக்கி பிடித்தால் வாகனத்தை ஏற்றி கொள்ள முயற்சிக்கும் மணல் திருடர்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழ் பேரரசு கட்சி கோரிக்கை.
மணல் திருட்டு சம்பந்தமாக தமிழ்ப்பேரரசு கட்சி தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் செவிடன் காதில் ஊதிய சங்காக மெத்தன போக்கோடு இருந்து வருகிறார்கள்.அல்லது வசூல் வேட்டையில் இருந்து வருகிறார்களா? என என்ன தோன்றுகிறது மணல் கொள்ளையில் ஈடுபடும் மாட்டு வண்டி ஆற்றில் இறங்காமல் இருக்க குழிகள் தோண்ட சொல்லியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தன போக்கோடு செயல்படுகிறார். இந்த நிலை நீடித்தால் தமிழ் பேரரசு கட்சி போராட்டத்தை முன்னெடுப்பதை தவிற வேறு வழியில்லை என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் பேரரசு கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் மக்கள் காவலர் முடி மன்னன் அறிக்கை.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்