செப்டம்பர்: 24
திருப்பூர் டிஜிட்டல் சவுத் அறக்கட்டளை நிர்வாகிகள்
எம்.பி.சுப்பராயனுடன் நேரில் சந்திப்பு
கோரிக்கை மனுவை வழங்கினார்கள்
திருப்பூர் டிஜிட்டல் சவுத் அறக்கட்டளையின் கொங்கு மண்டல தலைமை நிர்வாக அலுவலர் பூங்கொடி ராஜன் தலைமையில் கொங்கு மண்டல டிரஸ்டி விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயனை அவருடைய அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். அப்போது அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து எம்.பி.யிடம் விளக்கிக் கூறிய பூங்கொடி ராஜன், ஒருசில கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் எம்.பி. சுப்பராயனிடம் வழங்கினார்.