தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளை யொட்டி ஈரோடு பாமக கட்சி அலுவலகத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ராஜு தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பிரபு முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் பரமசிவம் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மாதையன் மற்றும் நிர்வாகிகள் பெருமாள் மணிகண்டன் சின்னசாமி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர் .
மேலும் 1987 ம் ஆண்டு நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் மரணம் அடைந்த தியாகிகளுக்கும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் பா.ம.க அலுவலகத்தில் நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.