அரியலூர்,செப்;18
அரியலூர் மாவட்டம் செந்துறையில் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் தந்தை பெரியார் 146-வது பிறந்தநாள் விழா சமூகநீதி உறுதிமொழி ஏற்புநாள் பெரியார் படம் ஊர்வலம் அண்ணா நகரில் இருந்து தி.க.வினர் மற்றும் தோழமைக் கட்சியினருமான விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் செந்துறை முக்கிய கடைவீதி வழியாக பேரணி ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.
பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் கடந்த வருடம் திராவிட கழக தோழர் மாவட்ட துணை செயலாளர் பொன்.செந்தில்குமாருக்கு பொலியோரோ மகிழ்ந்து வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாளில் திராவிட கழக தோழர்கள் ஒன்றிய தலைவர் முத்தமிழ்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழரசன், ஒன்றிய அமைப்பாளர் சேகர், இவர்களுடன் திமுக தோழர்கள் கோவிந்தசாமி, ரமேஷ், மோகன் உள்ளிட்ட 6 நபர்களுக்கு இருசக்கர வாகனத்தை தனித்தமிழ் கொட்றன், புலவர் அய்யம்பெருமள், செ.வெ.மாறன், கருப்புசாமி, புயல் சிறை ஆசிரியர் ராஜேந்திரன், தங்க.சிவமூர்த்தி ஆகியோர் வழங்கினார்கள்
பின்னர் முன்னுருக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பழன்பாட்டு பொருட்களான பெரியார் வாசகம் பொரிக்கப்பட்ட டிபன் பாக்ஸ் சக்கரை பொங்களுடன் திமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் தி.க மாவட்ட துணைச் செயலாளர் பொன்.செந்தில்குமார், காப்பாளர் சு.மணிவண்ணன், மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அறிவின், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மதியழகன், மாவட்ட விவசாய அணி தலைவர் சங்கர், மாவட்ட இணை செயலாளர் ரத்தின.ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனபால், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட விவசாய சங்க பாதுகாப்பு தலைவர் பாலசிங்கம், தலித்.வெற்றி, தீரவளவன், நகரத் தலைவர் இளங்கோவன், நலத்திட்ட உதவிகள் நிகழ்வினை செம்மொழி குழுமம் செயலாளர் பொன்.செந்தில்குமார், நீதி செயலாளர் ஆசிரியர் வெங்கடேசன், துணைச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்