சென்னை, செப்டம்பர் – 18, சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருந்துவமனையில் புறக்கருக்கட்டல் சேவைகள் (ஐ.வி.எஃப்) வரம் என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து எம்.ஜி.எம்.ஹெல்த்கேர் இயக்குநர்கள் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன்; டாக்டர் உர்ஜிதா ராஜகோபாலன்,
டாக்டர். D. தாட்சாயணி ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-
புதிதாக நிறுவப்பட்டிருக்கும் “வரம் ஐ.வி.எஃப் ” மையம், சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கருவாக்கம் மற்றும் கருவளம் சிகிச்சைகளையும் மற்றும் பராமரிப்பு சேவைகளையும் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேரில் நிறுவப்பட்டுள்ள இம்மையம், நவீன, தொழில்நுட்பத்துடன் விரிவான துணை சேவைகளோடு இத்துறையில் புகழ்பெற்ற, அனுபவம் மிக்க நிபுணர்கள் என அனைத்து வசதிகளையும் ஒரு கூரையின் கீழ் இணைத்து வழங்குகிறது.
ஒவ்வொரு நோயாளிக்கும் முழுமையான, பராமரிப்பை பெறுவதை உறுதிசெய்யும் வகையில் கருவாக்க சிகிச்சைகளை “வரம் ஐ.வி.எஃப்” வழங்குகிறது.
காரணம் அறியப்படாத மலட்டுத்தன்மையுடன் சிரமப்படும் தம்பதியினர் பெற்றோராக மாறவேண்டும் என்ற அவர்களது கனவை நிஜமாக்க உதவ எம்.ஜி.எம் ஹெல்த்கேர் – ல் தொடங்கப்பட்டுள்ள இந்த ஐ.வி.எஃப் சேவைகள் மிக முக்கிய பங்காற்றும்.
மலட்டுத்தன்மை மற்றும் கருவுற இயலாமையின் விகிதங்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன. 10-15% தம்பதியரை இது பாதிப்பதால், விரிவான ஐ.வி.எஃப் சேவைகளுக்கான தேவை முன்பு எப்போதையும் விட இப்போது மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது. நவீன நோயறிதல் செயல்பாடுகளிலிருந்து ஆலோசனை சேவைகள், பொருத்தமான சிகிச்சை செயல்முறைகள் வரை அனைத்தையும் ஒரு கூரையின் கீழ், எமது மையம் வழங்குகிறது என்று தெரிவித்தனர்.