நாகர்கோவில் செப் 17
தமிழ்நாட்டில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் 100 திருக்கோயில்களை புறணமைத்து திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற அறிவிப்பு 2022-23 ல் 100 திருக்கோயில் திருப்பணிகளில், நாகர்கோயில் கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயிலில், திருக்கோயில் நிதி ரூ. 15.90 லட்சமும், உபயதாரர் மூலம் ரூ.10 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து நேற்று காலை 10.00 மணி அளவில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத்தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், இணை ஆணையர் பழனிக்குமார், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீகாரியம் ரமேஷ், திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாநில துணை செயலாளர் சிவராஜன், வட்ட செயலாளர் முருகன் வட்ட பிரதிநிதிகள் பேச்சி முத்து, நடேசன், அஜித் ஆகியோர் கலந்து கொண்டார்.