கீழக்கரை:செப்,16:
ராமாபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 20 ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது என்று பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர்
ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 780 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் 32 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த சனி,ஞாயிறு மற்றும் மீலாது நபி விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை என்பதால் 20 ஆசிரியர்கள் நேற்று திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துள்ளதாக தெரிய வருகிறது தற்போது காலாண்டு தேர்வுக்கான நடைபெற்று வருவதால் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகளுக்கு படிப்பு ஏமாற்றமே இன்னும் ஒரு சில நாட்களில் காலாண்டுதேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இப்படி ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பது ஆசிரியர்களின் பொறுப்பின்மையை காட்டுகிறது என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் கல்வித்துறை மீது தனி கவனம் செலுத்த வேண்டும் இப்படி ஆசிரியர்கள் மொத்தமாக ஆப்சென்ட் செய்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகி விடும் என்று பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.