நியூ செஞ்சுரி லைன்ஸ் கிளப் சங்கம் சார்பில் ஹெல்மட் விழிப்புணர்வு ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு 100 பேருக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கினர்.
மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு நியூ செஞ்சுரி லைன்ஸ் கிளப் சங்கம் சார்பில் ஹெல்மட் விழிப்புணர்வு நடைபெற்றது. நியூ லைன்ஸ் கிளப் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி, நகர்மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்து சிறப்புரையாற்றினர். அதனை தொடர்ந்து சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு 100 பேருக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கினர். ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினர். இதில் நியூ செஞ்சுரி லைன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.