935 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.112.54மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கானஆணைகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்திரு.ஆர்.காந்தி அவர்கள் வழங்கினார்கள்.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்புக்கான ஆணைகளை
வழங்கியதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற
அரசு விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 935 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.112.54 மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கான ஆணைகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
ஆர்,காந்தி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர், திருவள்ளூர்
சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது, மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 935 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 13642 மகளிருக்கு 5.112.54 மதிப்பீட்டின் கடன் இணைப்புகளுக்கான ஆணைகளையும்,
மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.51.65 இலட்சம் மதிப்பீட்டில் பேக்கரி ஸ்டால் அழகு நிலையம் துணி வியாபாரம் தையல் தொழில் அரிசி வியாபாரம் ஹோட்டல் மளிகை கடை ஆகியவை அமைப்பதற்கான வங்கிக் கடன் உதவிகளும், சமூகநலத் துறை சார்பில் சத்திய வாணி அம்மையார் நினைவு விலை இல்லா தையல் இயந்திரம் திட்டத்தின் கீழ் 91 பயனாளிகளுக்கு ரூ 6.62 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரத்தினை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் ராஜேஷ் குமார், மாவட்ட கவுன்சிலர், விஜயகுமாரி, திருவலங்காடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுஜாதா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.