கிருஷ்ணகிரி,செப்.16
தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ் குமார் வழிகாட்டுதலின்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளியில் அ.ம.மு.க சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் ஜி. அருள் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சி மன்ற குழு தலைவருமான ஆர்.ஆர்.முருகன் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில இளைஞர் பாசறை துணை செயலாளர் அசோக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜி.திருநீலகண்டன், மாவட்ட அவை தலைவர் கோழி மாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏ.ஆர்.சக்திவேல், ஒன்றிய அவை தலைவர் டி.நாகராஜ், நாகரசம்பட்டி பேரூராட்சி செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய துணைச் செயலாளர் கந்தசாமி, ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் காளிதாஸ், நிர்வாகிகளான குள்ளனூர் மாது, ரவி, ரத்தினம், வடிவேல், துறையூர் மாணிக்கம், வாடமங்கலம் ராஜா, மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.