பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி வணங்கும் விதமாக சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூர் தி.மு.க சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் S.R.சிவலிங்கம்Ex.MLA, மாவட்ட கழக துணை செயலாளர் பாரப்பட்டி க.சுரேஷ்குமார் ,ஒன்றிய கழகச் செயலாளர் க.உமாசங்கர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் ஒன்றிய குழு துணைத் தலைவர் காட்டூர் ஜெ.சங்கர், பேரூர் கழக செயலாளர் R.ரவிக்குமார், பேரூராட்சி தலைவர், மற்றும் துணைத் தலைவர், பேரூராட்சி துணை செயலாளர்கள் ,வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சிக்குட்பட்ட கழக மூத்த முன்னோடிகள், உடன்பிறப்புகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.