மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. ஜிகே வாசன்
சென்னை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். நன்கு தமிழ் பேசக்கூடியவர்
1975 லிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக மக்கள் பணிக்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் பங்கேற்றவர்
இந்திய மாணவர் சங்கத்தில் இணைத்துக்கொண்டு மாணவர்கள் நலன் காக்க குரல் கொடுத்தவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக 32 ஆண்டுகாலம் பணியாற்றி பாராட்டுப் பெற்றவர்.
சி.பி.ஐ.எம். கட்சியில் 3 முறை தேசியப் பொதுச் செயலாளராக செயல்பட்ட பெருமை மிக்கவர்.
மாநிலங்களவை உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டவர்.
மேலும் இந்திய அளவிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த முன்னோடிகளோடு இணைந்து பணியாற்றியவர்.
தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) இயக்கத்தின் நிறுவனத் தலைவரான ஐயா ஜி.கே. மூப்பனார் அவர்களோடு மிகுந்த அன்பு கலந்த பாசத்தோடு பழகியவர்.
அவரது மறைவு அக்கட்சிக்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கே மிகப்பெரிய இழப்பாக அமைகிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கட்சியின் தோழர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்று குறிப்பிட்டுள்ளார்.