தஞ்சாவூர். செப்.12
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக சிற்பத்துறை சார்பில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகளுக்கு சிற்ப பயிற்சி வகுப்பு தொடங்கியது.
இந்த பயிற்சி வருகிற 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது இதன் தொடக்க விழா தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார் .அப்போது அவர் சிற்பங்கள் சமுதாயத்தின் நிலை யை காட்டும் பதிவுகளாக உள்ளது சாதாரண கல்லாக இருப்பதை கருத்தினை புகட்டும் போது கல்லானது சிற்பமாக வடிவம் பெறுகிறது. சிலைகள் சமூகத்தின் பிரதிபலிப்புகள் என்றார்.
இதில் பதிவாளர் தியாகராஜன் கலைபுல முதன்மையர் இளையாப் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர் .முன்னதாக சிற்பக்கலை தலைவர் லதா அனைவரையும் வரவேற்றார் நிறைவாக திட்ட உதவியாளர் சிவஞானராஜா நன்றி கூறினார் நிகழ்ச்சிகளை முதுநுண்கலை மாணவர் பாண்டியராஜ் தொகுத்து வழங்கினார்.