நாகர்கோவில் செப் 12
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.20 லட்சத்து ஆயிரத்து 307 கிடைத்துள்ளது.இக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் காணிக்கை செலுத்தும் வகையில் கோயில் நிா்வாகம் சாா்பில் 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
இதன்படி, குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், தேவசம் போா்டு இணை ஆணையா் பழனிக்குமாா் ஆகியோா் முன்னிலையில் அனைத்து உண்டியல்களும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. நாகா்கோவில் தேவசம் தொகுதி சரக உதவி ஆணையா் தங்கம், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோாா் உடனிருந்தனா்.உண்டியல் வருவாயாக ரூ. 20 லட்சத்து ஆயிரத்து 307 ரொக்கம் மற்றும் 5.420 கிராம் தங்கம், 323 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தது.