திருப்பூர் செப்டம்பர் :11
திருப்பூர் ராமமூர்த்தி நகர் மாநகர மேற்கு பகுதி இந்து முன்னணி சார்பாக 22 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி எழுச்சி விழா நகர துணைத் தலைவர் சௌந்தர்ராஜன் நகர செயற்குழு உறுப்பினர்
என். பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கொண்டாடப்பட்டது கடந்த மூன்று நாட்களாக நடந்த சிறப்பு பூஜைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர் நேற்று நடந்த விழாவில் மாநில செயலாளர்
வி எஸ் செந்தில்குமார் தலைமையில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து பெண்களுக்கான கோலப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர்
சி பி .சண்முகம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக மாமன்ற உறுப்பினர் காடேஸ்வரா தங்கராஜ் கோல போட்டியினை பார்வையிட்டு பரிசுகள் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் உன்னிகிருஷ்ணன் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.