மதுரை செப்டம்பர் 10,
மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மாநில அளவில் 31220 மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 3,74,277 மகளிர்க்கு ரூ.2874.26 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 12,233 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 1013 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ 108 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்புகள் என 25,000 மேற்பட்ட பயனாளிகளுக்கு 298 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் இடம் மற்றும் அங்குள்ள கழிவறை ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின், பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் அமருமிடம், காத்திருப்பு அறை, கழிவறை ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்துள்ளார். மதுரை யா. ஒத்தக்கடையில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,500 கோடி மதிப்பிலான சுழல் நிதி கடன் உதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் மதுரையில் 11,500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களை மக்கள் தேடிச் செல்லும் காலம் போய், மக்களை தேடிச் திட்டங்கள் செல்கின்றன எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சில குறைகள் இருப்பதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் இன்று அங்கு நேரில் வந்து ஆய்வு செய்துள்ளோம். மாலை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்போம். எந்த மாவட்டத்திற்கு போனாலும் ஆய்வு செய்து வருகிறேன். அந்த அடிப்படையில் இங்கும் ஆய்வு நடத்தினோம்.” எனத் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மட்டுமன்றி தென் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைக்கு முக்கிய பங்காற்றி வரும் மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைக்காக வருகை தந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், சிகிச்சையின் தரம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தார். அவர்களின் கருத்துக்களைப் பெற்றதோடு அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தவும், தக்க முறையில் சிகிச்சைகளை அளித்து மக்கள் நலன் காக்கவும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், அரசு மருத்துவர்களை அறிவுறுத்தினார். மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக வந்துள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை திமுக ஒன்றிய செயலாளர் ரகுபதி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தினை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் புத்தகங்களை வாசித்து பெண்களை ஊக்குவிகற்கும் வகையில் கலந்து உரையாடினார். இவ்விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் சதிவ்யதர்சினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் (மதுரை), தங்கதமிழ்ச்செல்வன் (தேனி) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), மாநகராட்சி ஆணையாளர் ச. தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் கா.வானதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா கலாநிதி, துணை மேயர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.