பொள்ளாச்சி : செப்டம்பர்: 09
பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதியான 26 வது வார்டு கடைவீதியில் பொதுமக்கள் இணைந்து சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் பொள்ளாச்சி நகரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது .
பொள்ளாச்சி 26 வது வார்டுக்குட்பட்ட கடைவீதி பகுதியில் பொதுமக்களால் இணைந்து விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் 26 வது வார்டு கவுன்சிலர் எம்.கே சாந்தலிங்கம் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்து அனைத்து மதத்தினரையும் அழைத்தும், இஸ்லாமிய சகோதரரான முபாரக் பாய் என்பவரை குத்து விளக்கேற்ற வைத்து, விமரிசையாக கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்து கொண்டாடப்பட்டது.
இதில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ்,கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம், ஜெயச்சந்திரன், சின்னத்தம்பி, கவர் கடை ராஜு, சிபி சக்கரவர்த்தி மற்றும் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் என மத பாகுபாடு இல்லாமல் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.