ராமநாதபுரம்,செப்.7:-
தி.மு.க மாணவரணி மாநிலத்தலைவர் தேர்போகி ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் மாவட்ட தலைவர் ஆர்.கே.கே.கார்த்திக்,தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் காயாம்பு,தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் மானாங்குடி பத்மநாபன்,அழகை மீரான்,நாகூர் கனி,முத்துப்பாண்டி,ராஜா உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முன்னதாக சித்தார் கோட்டை சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.அதனைத் தொடர்ந்து கீழக்கரை வட்டம் புல்லந்தையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.புத்தேந்தல் கிராமத்தில் உள்ள செஞ்சோலை மனநலக் காப்பகத்தில் உள்ள பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கி,தனது சொந்த ஊரான தேர்போகி கிராமத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள்,பத்திரிகையாளர்கள்,சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார்.