ஈரோடு, செப். 8
ஈரோடு திண்டலில் வேளாளர் மருந்தியல் கல்லூரி செயல்படுகிறது இந்த கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழா மற்றும் ஆராய்ச்சி வளாக கட்டிட திறப்பு விழா தாளாளர் சந்திரசேகர் தலைமையில் நடந்தது அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் டாக்டர் சரவண குமார் வரவேற்றார் இதில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்